புரட்டாசி 2வது சனிக்கிழமை: கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி வைணவ கோயில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Continues below advertisement

கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Continues below advertisement

 


புரட்டாசி சனி:

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனான முடி காணிக்கையும், பாத காணிக்கையும் செய்தும், அன்னதானம் வழங்கியும் தங்களுடைய நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர்.

 


போலீஸ் கண்காணிப்பு

மேலும் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி கரூர் மாவட்ட மட்டுமல்லாது அருகில் உள்ள நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு போலீசார் சிசிடிவி கண்காணிப்பு கேமராவுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 


புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு குளத்துப்பாளையம் பண்டரிநாதன் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.

 

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிக உகந்த மாதமாகும். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு வெங்கமேடு குளத்துப்பாளையம் ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் மூலவர் மற்றும் உற்சவர் பண்டரிநாதன் மற்றும் ருக்மணி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மூலவர் பண்டரிநாதன் உற்சவர் பண்டரிநாதன் மற்றும் ருக்மணி தாயாருக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து அதன் தொடர்ச்சியாக தங்க ஆபரணங்கள் அனுபவிக்கப்பட்டது.

 


பின்னர் ஆலயத்தின் பட்டாச்சாரியார் பண்டரிநாதனுக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் குளத்துப்பாளையம் பத்ரிநாதர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத சிறப்பு அபிஷேகத்திற்கான ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்கின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola