Isha Mahashivratri 2023: ஈஷாவில் பிரமாண்டமான மகா சிவராத்திரி விழா - எப்போது..? என்ன நேரம்? முழு விவரம்

கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவை சுமார் 14 கோடி பேர் நேரலையில் பார்த்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

கோவையில் உள்ள ஈஷா மகா சிவராத்திரிதான் கடந்த சில ஆண்டுகளாக அதிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் அருகில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், உள்நிலை பரிமாற்றத்தையும் நல்வாழ்வையும் நாடி வருபவர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த இடமாக விளங்குவதாக அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

மகாசிவராத்திரி:

வரும் பிப்ரவரி -18 (சனிக்கிழமை) அன்று மகா சிவராத்திரி நாள். இந்த நாளில் ஈசனை முழு மனதோடு வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் சிவாலயங்களில் இரவில் நான்கு காலமாகப் பிரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது மிகவும் நல்லது.

உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா இந்த வருடம் பிப்ரவரி 18-ம் தேதி மேலும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஊறி திளைத்த கலாச்சாரமாக நம்முடைய பாரத கலாச்சாரம் திகழ்கிறது. திருவிழாக்களின் தேசமாக விளங்கும் நம் பாரத தேசத்தில் மஹா சிவராத்திரி விழா என்பது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. 

எப்போது?

யோக அறிவியலுடன் மிகவும் தொடர்புடைய இவ்விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழா தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

நிகழ்ச்சிகள்:

மகாசிவராத்திரி இரவில் இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல் நோக்கி எழ செய்வதற்கு ஏதுவாக உள்ளது. எனவே, இந்த இரவில் ஒருவர் முதுகுதண்டை நேராக வைத்திருந்து விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் ஆன்மீகம் சார்ந்த மகத்தான பலன்களை பெற முடியும்.

இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ - டியூப் சேனலான Sadhguru Tamil–https://www.youtube.com/watch?v=sKlm7qvLecQ-ல் நேரடி  ஒளிப்பரப்பு செய்யப்படும். மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி லைக்காட்சிகள் மற்றும் யூ - டியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கடந்தாண்டு ஈஷா மகாசிவராத்திரி விழாவை சுமார் 14 கோடி பேர் நேரலையில் பார்த்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டும் மிக சிறப்புடன் மகா சிவராத்திரி கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola