மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமையும் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். 




இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி இங்கு மட்டுமே உள்ளது. ஆஞ்சநேயர், இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்து. திரும்பி வரும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம் என்றும், அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு, தற்போது மறுவி அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு.  எனவே, இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.




இத்தகைய சிறப்பு மிக்க அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமியை தரிசனம் செய்தனர்.




மருதூர் ஸ்ரீராம வரதாஹினி மடத்தில்  அருள்பாளித்து வரும் ஆஞ்சநேயருக்கு ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உட்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மருதூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராம வரதராகினி மடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஹனுமத் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, ஆலய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், கஜ பூஜை கோ பூஜை, அஸ்வ பூஜை, ஒட்டக பூஜை, ரிஷப பூஜை போன்ற சிறப்பு பூஜைகளோடு வழிபாடு நடைபெற்றது. 




இதில் தருமபுரம் ஆதீனம் 27 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். தொடர்ந்து யானை, குதிரை, ஒட்டகம், பசுமாடு, காளை மாடு ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நாதஸ்வரம், தவில் நளபாகம் கலைஞர்களுக்கு தருமபும் ஆதீனம் விருது வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.