கரூர் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா.






கரூர் மாவட்ட கோவில் அனுமான் ஜெயந்தி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் வெண்ணமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற ஆத்ம நேய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவிலில்  அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு தயிர், இளநீர் திருநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


இதுபோன்று தாந்தோணி மலை மில்கேட் பகுதியில் ஆஞ்சநேயர் வெண்ணை, சந்தனம் உள்ளிட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதுபோன்று தாந்தோணி மலை பஸ் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் 1008 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.




புன்னம் ஊராட்சியில் குட்டை கடையிலிருந்து புண்ணம் செல்லும் சாலையில் அனுமந்தராய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விநாயகர் பூஜை யாகசாலை பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அனுமந்தராய சுவாமிக்கு வெண்ணை சாத்தி துளசி மாலை வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு வடை மாலையுடன் அனுமந்தராய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.




வெள்ளியணை அருகே பஞ்சபட்டியில் பழமையான பால ஆஞ்சநேயர் கோவில் உள்ளது அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அனுமனுக்கு இளநீர் பால் தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.




தோட்டக்குறிச்சி, செங்கல் மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால் பழம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பழங்களால் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து துளசி ,வெற்றிலை ஆகியவற்றில் மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு மகாதீப ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமி கழுத்தில் இருந்த வடை மாலை எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன இதே போல், கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.