நவக்கிரகங்களில் முக்கிய கிரகமும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக கொண்டாடப்படுகிறது.




குரு பெயர்ச்சியின் சிறப்பு


நவக்கிரகங்களில் குருவிற்கும், சனிவிற்கும் தனி இடம் உண்டு. இந்த இரண்டு கிரகங்களும் இடம்பெயரும் நேரத்தில் ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 ராசிகளுக்கும் பலன்கள் வகுக்கப்படுகின்றன. அந்த வகையில் நேற்று மாலை  05.19 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி பிரவேசிக்கிறார். இம்முறை குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய 7 ராசிக்காரர்களும் பரிகாரம் செய்துகொள்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.




குருபெயர்ச்சியின் பலன்கள்


அதன்படி, நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் நவக்கிரகங்களில் குருபகவான் பொதுவாக நற்பலன்களை அளிக்க கூடியவராக விளங்குகிறார். மேலும் குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது குருபகவான் தரிசனம் செய்து குரு அருளை பெறுவதாலும், குறிப்பிட்ட ராசியினர் பரிகாரம் செய்துகொள்வது சிறந்ததாகவும், குறிப்பாக கல்வி, தொழில் ஆகியவற்றில் மேன்மை அளிப்பவராகவும், திருமணதடை நீக்கி அருள்பாலிப்பவராகவும் குருபகவான் விளங்குகிறார்.  




தட்சிணா மூர்த்தி கோயில்களில் சிறப்பு வழிபாடு


இதன் சிறப்பாக மூடி அருள்மிகு சுப்ரமணி சுவாமி கோவிலில் அமைந்துள்ள நவகிரகங்களில் குரு பகவானுக்கு 18 வகையான அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தனி மூலவராக அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு 18 வகையான அபிஷேகம் 108 பால் லிட்டர் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.  இதையடுத்து தட்சிணாமூர்த்திக்கு லட்சார்ச்சனை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றன. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக சுண்டல் பொங்கல் வழங்கப்பட்டன.




இதேபோல் தேனி மாவட்டத்தில் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் உத்தமபாளையத்தில் உள்ள ஞானாம்பிகை திருக்கோவில் உள்ளது. இக்கோவில் தென் மாவட்டங்களில் ராகு , கேது பரிகார ஸ்தலமாக உள்ள இவ்வாலயத்தில் தனி சன்னதியாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் தனி உப சன்னிதானமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதே போல் கம்பம் காசி விஸ்வ நாதர் ஆலயத்திலும் உள்ள கோவிலிலும், தேனி வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளிட்ட ஆலயங்களிலும் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.