கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


 



Guru Peyarchi 2024: கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய குரு பெயர்ச்சி விழா


 


மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியை ஒட்டி பல்வேறு ஆலயங்களில் நவக்கிரகங்கள் மற்றும் குருபகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்ற நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.


 


 




 


நிகழ்ச்சி முன்னிட்டு ஆலய மண்டபத்தில் பிரத்யேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நவ கிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 


 




 


அதைத்தொடர்ந்து குரு பகவானுக்கு மஞ்சள் ஆடை உடுத்தி, சுண்டல் மாலை அணிவித்து பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சரியாக 05.19 மணி அளவில் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


 




 


அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நவகிரக குரு பகவானுக்கும் தொடர்ந்து பல்வேறு ஆலயத்தில் உள்ள நவக்கிரக குரு பகவானுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஆலயங்களில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.