கரூரில் புது வாங்கலம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்.


கரூர் மாவட்டம், வாங்கல் புது வாங்கலம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை காண விரிவான ஏற்பாடுகளை விழா நிர்வாகிகள் செய்துள்ளனர். கரூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான வாங்கல் புது வாங்கலம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் முற்றிலும் புனரமைக்கப்பட்டது. இதை அடுத்து நாளை (26ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23 ஆம் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட திருத்த குட ஊர்வலம் நடந்தது. கோவிலில் கடந்த 20ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு தேச மங்கையர்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. நேற்று (24 ம் தேதி) 2 ம் கால மற்றும் 3 ம் காலை யாகசாலை பூஜைகள் நடந்தது. இரவு செந்தில், ராஜலட்சுமி, வேல்முருகன் மற்றும் இசை கலைஞர்களின் கிராமிய மற்றும் பக்தி இசை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் இன்று (25ஆம் தேதி) 4 மற்றும் 5ம் காலயாக பூஜைகள் நடைபெற உள்ளன. இரவு கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மியாட்டம் நடைபெறுகிறது. நாளை காலை 8: 45 மணிக்கு மேல் 9:45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


கரூரில் இருந்து கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயில் அருகே பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அன்னதான கூட்டத்தில் நேற்று மாலை தொடங்கி 20 மணி நேரமாக அன்னதானம் நடைபெறுகிறது. சேலம் - கரூர் - திருச்சியில் இருந்து வாங்கல் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் புது வாங்கலம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாங்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


கரூரில் இருந்து கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயில் அருகே பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அன்னதான கூட்டத்தில் நேற்று மாலை தொடங்கி 20 மணி நேரமாக அன்னதானம் நடைபெறுகிறது. சேலம் - கரூர் - திருச்சியில் இருந்து வாங்கல் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் புது வாங்கலம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாங்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் சிவக்குமார், திருப்பணி குழு தலைவர் பிரேம் டெக்ஸ் வீரப்பன், கௌரவ தலைவர் ராமசாமி, செயலாளர் ஜெ.டெக்ஸ் தங்கராஜ், பொருளாளர் வி. கே.ஏ குரூப் சாமியப்பன், துணை தலைவர்கள் செல்வம் கல்லூரி டாக்டர் செல்வராஜ், நவ்ரங் டையிங் சுப்பிரமணியன், இணை செயலாளர்கள் ராமசாமி, முத்து ஏஜென்சிஸ் முத்துசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் கீதாலயா சக்திவேல், வி. கே.ஏ பஸ் கருப்பண்ணன் ஆகியோரும், விழா நெறியாளர்கள்  வாங்கலம்மன் எலக்ட்ரிகல்ஸ் முருகேசன், வா. பசுபதிபாளையம் சுரேந்தர், புது வாங்கலம்மன் திருப்பணி குழு உறுப்பினர்கள், சேவா அறக்கட்டளை உறுப்பினர்கள், இளைஞர் அணியினர் மற்றும் வரகுண்ணா பெருங்குடி குலகுடி பாட்டு பங்காளிகள் செய்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரத்தியேகமாக வருகை புரிந்து தீர்த்தக் கூட பேரணியை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரம்மாண்ட மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சிறப்பித்தனர்.