தாய்லாந்தில் இருந்து வந்த பக்தர்கள்
பஞ்ச பூத ஸ்தலங்கள் என அழைக்கப்படும் ஆகாயம் , நீர் , காற்று, வாயு , நெருப்பு ஆகிய திருத்தலங்களை தரிசிக்க தாய்லாந்தில் இருந்து 28 நபர்கள் கொண்ட குழு நேற்று மாலை காஞ்சிபுரம் வருகை புரிந்தது. ஏற்கனவே சிதம்பரம் கோயிலை தரிசித்த பின் நேற்று காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்தனர்.
மாமரத்தை வியந்து பார்த்த வெளிநாட்டு பக்தர்கள்
அதன்பின் இன்று பஞ்சபூத தலங்களில் ஒன்றான மண் தளம் என அழைக்கப்படும் ஸ்ரீ காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் 28 நபர்களும் சுற்றி தரிசனம் மேற்கொண்ட பின் தல விருட்சம் மரம் அருகே தியானத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு சிறப்பு பூஜை மேற்கொண்டு தரிசனம் பெற்ற பின் அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கையில், வருடத்திற்கு இரு முறைக்கு மேல் தமிழ்நாடு வந்து ஆன்மீக கலாச்சாரம் உள்ள பகுதிகளை தரிசித்து வருவதாகவும், தங்களுக்கு அது பிடித்துள்ளதால் அதன் வழியை பின்பற்றும் வகையில் தங்களது நாட்டிலும் சிவன் மற்றும் அம்மன் திருக்கோயில்கள் நிர்மானித்து வழிபட்டு வருவதாகவும், மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.
ஓம் நமச்சிவாய என்ற ஸ்லோகம்
தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அதனை காணும் நிகழ்வு மகிழ்ச்சி அளிக்கிறது என அனைவரும் தெரிவித்தனர். அனைவரும் தியானத்தில் ஓம் நமச்சிவாயா மற்றும் ஸ்லோகங்கள் கூறி தியானத்தில் ஈடுபட்டது திருக்கோயில் வந்த பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்