தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவில் பூச்செரிதல் விழா பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஆலயம் வருகை தந்து தரிசனம் செய்தனர்.




தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பெரும் திருவிழா 15 நாட்கள் நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக கம்பம் போடும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.




அதை தொடர்ந்து பூச்செரிதல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று நடைபெற்ற மாரியம்மன் பூச்செடுதல் விழாவில் 45 க்கு மேற்பட்ட பகுதியில் இருந்து பல்வேறு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக மேல தாளங்கள் முழங்கு தேர் வீதி அருள்மிகு மாரியம்மன் ஆலயம் வந்தடைந்தனர் தொடர்ந்து பூக்களால் மாரியம்மன் கம்பத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது மாலை தொடங்கிய உச்சரிதல் விழா நிகழ்ச்சி தொடர்ந்து அதிகாலை வரை நீடித்தது. ஆண்கள் பெண்கள் என ஏராளமான பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பூச்செரிதல் வாகனத்தில் உடன் வந்து மாரியம்மனை மனம் உருகி வழிபட்டனர்.




மாரியம்மன் ஆலயத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் பூச்செரிதல் விழாவில் 45 க்கு மேற்பட்ட பகுதியில் இருந்து பூக்களை கொண்டு வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர் நிகழ்ச்சியை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண