இந்தியாவில் உள்ள உணவுகளுக்கு உலகம் முழுவதும் அமோகமான வரவேற்பு எப்பொழுதும் உள்ளது. இங்கு உள்ள உணவுகளனது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி சிறப்புகளை கொண்டுள்ளது. நமது நாட்டில் உள்ள உணவுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவு தனது நாக்கை அடிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு நமது நாட்டின் உணவு கலாச்சாரம் ஆனது எப்பொழுதும் மற்ற நாடுகளை விட மேலோங்கியே உள்ளது.
இப்பொழுது நாம் தென்னிந்தியாவில் உள்ள ஒரு இனிப்பான மற்றும் அனைத்து தரப்பினரும் அதிக அளவு விரும்பக்கூடிய இரண்டு உணவுகளை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். நமது தென்னிந்தியாவில் போளி என்ற இனிப்பு உணவானது, அனைவராலும் அறியப்பட்டது. இதனை ஒரு சில இடங்களில் ஒப்புட்டு என்றும் அழைக்கிறார்கள். இதன் சுவையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் ஈர்த்து வைத்துள்ளது.
நாம் இப்பொழுது தேங்காய் போளி மற்றும் பருப்பு போளி என இரண்டு வகையான போளிகளைப் பற்றியும் அதன் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களையும் பார்ப்போம். இந்த போளியானது வட நாட்டு உணவாக இருப்பினும்,இது புகழ் பெற்ற உணவாக இருக்கும் இடம் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகள் ஆகும்.
இந்த மாநிலத்தில் தான் இது மிகவும் சிறப்பு பெற்ற உணவாக உள்ளது.இந்த பருப்பு போளியானது,ஒரு ரொட்டி போன்ற வடிவத்தில் இருக்கும். இதனைப் பார்த்தாலே நமது நாக்கில் தானாக எச்சில் ஊறும். இது பொதுவாக ஒரு ஆரோக்கியமான உணவாக பார்க்கப்படுகிறது. ஆனால் போளியினால் ஏற்படும் பாதிப்பு பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் ஏற்படும் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைவது, இதில் பயன்படுத்தப்படும் மைதா ஆகும்.
மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படும் பருப்பு போளியானது,மைதாமாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் தயாரிக்கப்படும் தேங்காய் போளியானது,கோதுமை மாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. கர்நாடகாவில் தேங்காய் போளிக்கு ஒப்புட்டு என்று இன்னொரு பெயரும் உண்டு. இதுவும் ரொட்டி போன்றே இருக்கும்.தேங்காய் போளிக்கும் பருப்பு போளிக்கும் பயன்படுத்தப்படும் மூலப்பொருளில் ஒரு சில பொருட்களே,வித்தியாசப்படும் . பருப்பு போளியானது பருப்பு மற்றும் வெள்ளம் கலந்து தயாரிக்கப்பட்டிருக்கும். தேங்காய் போளியானது துருவப்பட்ட தேங்காய் பூ மற்றும் ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவற்றின் சுவைகளை அதிகரிக்க மேலும் பல பொருள்கள் சேர்க்கப்படுகிறது. இப்பொழுது தேங்காய் ஒப்புட்டு எப்படி செய்யப்படுகிறது என்பதை பார்ப்போம்.
தேங்காய் போளி
தேங்காய் பொளியானது எப்படி செய்ய வேண்டும் என்றால்,முதலில் கோதுமை மாவை நன்கு பிசைந்து ஒரு மணி நேரத்துக்கு நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு தேங்காய்,வெல்லம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றினை சிறிது நெய் ஊற்றி வருக்க வேண்டும். பின் இதனை சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு, அதன்பிறகு அதனை உருண்டையாக பிடித்து தட்டையாக தேய்த்து அதனை சப்பாத்தி போல் நெய்யினை மேல் தடவி சுட வேண்டும் இப்பொழுது சுட சுட தேங்காய் போளியானது தயாராகிவிடும். பொதுவாக தேங்காய் போளி மற்றும் பருப்பு போளியானது ஒரே மாதிரி இருந்தாலும் அதில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் மூலம் சுவைகளானது தனித்தனியாக உள்ளது.
இத்தகைய இனிப்பு உணவுகளை நாம் அனைத்து பண்டிகைகள் மற்றும் திருவிழா காலங்களில் சமைத்து நம் குடும்பத்துடன் சேர்ந்து சுவைத்து உண்டு மகிழலாம். ஆனால் இத்தகைய போளிகளில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றது. மைதாவைத் தவிர்த்து போளிகளை செய்து உண்டு மகிழ்வோம்.