பொதுவாக நம்மூரில் பல்வேறு விதமான பலமொழிகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பதாகும். இதன்மூலம் ஆமையை நாம் துரதிர்ஷ்டசாலி என ஒதுக்குகிறோம். பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஆமை ஆன்மிகம் என வந்து விட்டால் ஒதுக்குகிறோம். ஆனால் திருமாலில் அருள் பெற்ற ஆமை அவரின் பத்து அவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதாரமாகும். 

Continues below advertisement

ஆன்மிகப்படி, ஆமை உங்கள் வீட்டிற்குள் புகுந்தால் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது அர்த்தமாக பார்க்கப்படுகிறது. வடமாநிலங்களில் பலரின் வீட்டின் வாயிலிலும் ஆமை சிலை இருப்பதைக் காணலாம். சீனாவில் ஆமை அதிர்ஷ்டம் தரும் பொருளாகவே அறியப்படுகிறது. நீண்ட ஆயுளுக்கு பெயர் போன ஆமை அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் சொல்லப்படுகிறது. நீங்கள் யதார்த்தமாக எங்கேயும் ஆமையைப் பார்த்தால் விரைவில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என்பது ஐதீகமாகும். 

வீடுகளில் ஆமை இருந்தால் என்ன பலன்?

உங்கள் வீட்டில் ஆமை சிலை இருந்தால் அது குடும்பத்தினருக்கு நீண்ட ஆரோக்கியம், நீள் ஆயுள், அதிர்ஷ்டம் ஆகியவை கிடைத்து வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. வடக்கு திசையில் ஆமை சிலையை வைப்பது சிறந்தது என சொல்லப்படுகிறது. இதன்மூலம் வீட்டில் நேர்மறை எண்ணம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும். அதேபோல் மரத்தால் செய்யப்பட்ட ஆமை சிலையை வீட்டின் கிழக்கு பக்கத்தில் வைத்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. 

Continues below advertisement

இத்தகைய ஆமையை நாம் வீட்டில் வைப்பதற்கு சில வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையில் ஆமையை வைத்தால் பணப்பற்றாக்குறை இருக்காது. சிறிது சிறிதாக செல்வம் சேரும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டால் ஒரு ஜோடி ஆமை சிலை வாங்கி வைத்து வழிபடலாம் என சாஸ்திரம் கூறுகிறது. 

ஆமை கோயில்கள் பற்றி தெரியுமா?

இத்தகைய ஆமைகள் கடவுள் ரூபமாகவும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஆந்திராவில் செயல்பட்டு வரும் ஸ்ரீகூர்மம் கோயில் பெருமாள் ஆமை வடிவில் தான் காட்சிக் கொடுக்கிறார். சித்தூரில் உள்ள ஸ்ரீ கூர்ம வரதராஜ சுவாமி கோயிலில் விஷ்ணு பகவான் ஆமை வடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் தெப்ப குளத்தில் ஆமைகள் காணப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஆமை மண்டபம் உள்ளது. தென்னிந்தியாவில் ஆமைகளுக்கு கோயில்களில் தனியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனியும் ஆமையை அதிர்ஷ்டம் இல்லாத உயிரினமாக பார்க்காதீர்கள். 

(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)