தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
திருப்பதியில் தீபாவளி:
தீபாவளி பண்டிகை நாட்களில் வீடுகளில் பூஜை செய்யப்படுவதுடன் கோயில்களுக்கு செல்வதையும் மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். திருவண்ணாமலை, திருப்பதி போன்ற புகழ்பெற்ற கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அன்றைய நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு இருக்கும்.
நடப்பாண்டிற்கான தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் வருகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் வைணவ தலங்களில் ஏராளமான உற்சவங்கள், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். ஐப்பசி மாத உற்சவம் திருப்பதியில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
விஐபி ப்ரேக் தரிசனம் ரத்து:
தீபாவளி தினத்தில் புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் ஐப்பசி மாத உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். தீபாவளி நன்னாளில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவு திருப்பதியில் குவிவார்கள் ஆகும். இதன் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி விஐபி ப்ரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், வழக்கமாக திருப்பதியில் வியாழக்கிழமை நாளில் நடைபெறும் திருப்பாவாடை உற்சவம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி முன்னிட்டு காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை தீபாவளி அஸ்தனம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது:
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விதமாக தீபாவளி நாளில் திருப்பதியின் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி – பூதேவியுடன் வீதி உலா வர உள்ளார். மேலும், தீபாவளி நன்னாளில் திருப்பதியில் மாலை 5 மணியளவில் சகஸ்ர தீப அலங்கார சேவை நடத்தப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் சாமி தரிசனம் மற்றும் தங்கும் இடங்களுக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான 30ம் தேதி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தீபாவளி பண்டிகை நாளில் அதிகளவு குவிவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்துள்ளது.