தீர்த்தமலை உள்ள  சுமார் 1300 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில் பொதுமக்கள் பங்களிப்புடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிக்கு இன்று சிறப்பு பூஜை செய்து தொடங்கப்பட்டது.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அருகில் மலை உச்சியில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மலைக் கோயிலில், மலைகளில் பாறை இடுக்குகளிலிருந்து ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம், அக்னி தீர்த்தம், மூலிகை தீர்த்தம் என ஐந்து வகையான தீர்த்தங்கள் இயற்கையாகவே வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தங்களில் நீராடுவதால் உடல் உஷ்ணம் தணிந்து, நோய் வாயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதால், இந்தப் பகுதியில் உள்ள மக்கள் இந்த தீர்த்திற்கு வந்து புனித நீராடி சிவனை வழிபடுவது வழக்கம். 



 

மேலும் அதே போல் தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் என்பதால் பல்வேறு சுப காரியங்கள், திருஷ்டி கழிப்பது போன்ற நிகழ்வுகளுக்கு ஏராளமான பக்தர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். எப்பொழுதும் பரபரப்பு மிகுந்த இந்த திருக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, ஆடி பெருக்கு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் குவிவதால் தீர்த்தங்களில் புனித நீராடுவதற்கு முடியாமல் தள்ளுமுள்ளு ஏற்படும் நிலையே இருக்கும்.

 

இந்நிலையில் தீர்த்தமலை மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தீர்த்தகிரி ஈஸ்வரர் கோவில்  ஏழாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் உள்ளது. இந்த சிவஸ்தலத்தினை புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக அரசு கோரிக்கை விடுத்து வந்தனர்.



 

இதனைத் தொடர்ந்து தீர்த்தகிரி ஈஸ்வரரை குடி தெய்வமாகக் கொண்டவர்கள் இந்து அறநிலை துறையை அணுகி இந்த கோயிலில் பாலாலயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் இதனை எடுத்து தற்பொழுது பொதுமக்கள் பங்களிப்புடன் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு கோயிலை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மலைமீது சிவாச்சாரியார்கள் யாக பூஜை செய்தனர். எதற்காக மேளதாளங்கள் முழுக தீர்த்தங்களை எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்தனர்.

 

இந்த பணியில் மலை மீதுள்ள விநாயகர், முருகன் அம்மன், அகஸ்தியர், துர்க்கை உள்ளிட்ட ஆலயம், சுற்று சுவர், நடைப்பாதை உள்ளிட்டவைகள் புனரமைக்கப்படும். இந்த பணிகள அடுத்த ஓராண்டுக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாக பூஜையில், செயல் அலுவலர் பிரபு, ஆய்வாளர் இன்ப சேகரன், பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண