2024ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் இன்று பிறந்துள்ளது. ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதமானது ஜனவரியைப் போன்று பல சிறப்புகளை கொண்டது ஆகும்.
இந்த மாதம் எந்த நாளில் என்னென்ன விசேஷங்கள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
டிச. 1 – ஞாயிறு – அமாவாசை
டிச. 2 – திங்கள் – சோமவாரம், சந்திர தரிசனம்
டிச. 5 – வியாழன் – சதுர்த்தி விரதம்
டிச.6 – வெள்ளி – திருவோண விரதம்
டிச. 7 – சனி – சஷ்டி விரதம்
டிச. 11 – புதன் – ஏகாதசி விரதம்
டிச. 13 – வெள்ளி – பரணி தீபம், பிரதோஷம், திருக்கார்த்திகை தீபம்
டிச. 15 – ஞாயிறு – பெளர்ணமி விரதம்
டிச. 16 – திங்கள் – சபரிமலையில் நடை திறப்பு, மார்கழி மாத பிறப்பு
டிச. 18 – புதன் – சங்கடஹர சதுர்த்தி விரதம்
டிச. 25 – புதன் – கிறிஸ்துமஸ்
டிச. 26 – சனி – பிரதோஷம்
டிச. 29 – ஞாயிறு – மாத சிவராத்திரி
டிச. 30 – திங்கள் – அமாவாசை, சோமவார விரதம்
முக்கிய விசேஷங்கள்:
டிசம்பர் மாதத்தில் மிகவும் முக்கிய நாட்களாக கார்த்திகை தீபத் திருவிழாவும், கிறிஸ்துமஸ் பண்டிகையும் வருகிறது. கார்த்திகை தீபத்தை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக பக்தர்கள் கொண்டாடுவது வழக்கம். சிவாலயங்களிலும், முருகப்பெருமான் ஆலயங்களிலும் அந்த நன்னாளில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.
அதேபோல, டிசம்பர் மாதத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடபபடுகிறது. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து தோன்றிய நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மார்கழி மாதம் வரும் டிசம்பர் 16ம் தேதி பிறக்கிறது. அந்த நாளில் புகழ்பெற்ற சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.