ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்ப்வான் டேவிட் வார்னர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். என்னய்யா இவ்வளவு பெரிய மனுஷன் இப்படி குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்கார் என்று சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருக்கும். ஆனாலும் அவரின் செயல்பாட்டை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் அடிக்கடி ஏதாவது சுவாரஸ்யமான பாட்டுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார். 


இந்தியா மீதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மீதும் டேவிட் வார்னருக்கு அவ்வளவு பிரியம் உண்டு. ஐ.பி.எல். போட்டிகள் அறிமுகமாகியதிலிருந்து நாடுகளை கடந்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய ரசிகர்களிடையே ஒருவித பந்தம் ஏற்பட்டுவிட்டது. 


புஸ்பா படத்தில் அல்லு அர்ஜூனா நடனமாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர் ஆடுவது போன்று செயலி மூலம் மாஃபிங் செய்து வீடியோ வெளியிட்டார். இதேபோல வசூல் சாதனை படைத்த கே.ஜி.எப். - 2 படத்தில் யாஷ் பேசிய டைலாக்களை ரீல்ஸ் செய்து வெளியிட்டார். இது இணையத்தில் வைரலானது. ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் டேவிட் வார்னர் இந்தியாவை மறப்பதில்லை, அவரது குடும்பமும்தான். 


விநாயகர் சதூர்த்தி வாழ்த்து:


நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


விநாயகரின் போட்டோவோடு, அவரை வணங்குவது போல இருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், என் நண்பர்களுக்கு இனிய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்.” என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். 






இதற்கு ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். டேவிட் வார்னரின் வாழ்த்து இன்றைய நாளை மிகவும் அழகாக்கி விட்டதாக கொண்டாடி வருகின்றனர்.


விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம்:




சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் இரட்டைப் பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவண்ணாமலையில் இரட்டைப் பிள்ளையார் திருக்கோவிலில் இரட்டைப் பிள்ளையாருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் இரட்டைப் பிள்ளையார்



 










 

 

பிள்ளையார்பட்டி கோவிலில் தீர்த்தவாரி நிகழ்வு - குவிந்த பக்தர்கள்..!






விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 







 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - நிபந்தனை விதித்த நீதிமன்றம்





விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் விழா ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. 










ABP Nadu-வின் இனிய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துகள். மகிழ்ந்திருங்கள்!