சென்னை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கட்டிடக்கலை நிபுணர் சீனிவாசன். விநாயகரின் தீவிர பக்தர் ஆன இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகளைக் கொண்ட கண்காட்சியை நடத்தி வருகிறார். தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் உள்ள மண்டபத்தில் இவரது கண்காட்சி நேற்று தொடங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.



 

இந்த கண்காட்சியில் அரை இன்ச்சில் இருந்து 8அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன் இரும்பு கண்ணாடி போன்றவற்றிலான அனைத்து வகை விநாயகர் சிலைகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.



 

கண்காட்சியில் பல வகை விநாயகர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சொர்க்க வாசல் விநாயகர் கண்ணாடி மாளிகையில் சொர்க்கத்தில் இருப்பது போன்றும் ஸ்கூட்டர் சைக்கிள் கார் ரயில் ஓட்டும் விநாயகர் சிலைகளும் இசைக் கலைஞர்களாக பல்வேறு வாத்தியங்களை இசையமைக்கும் வடிவத்தில் விநாயகர் சிலைகளும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.



 

நர்த்தன கணபதி காசியானந்த கணபதி பல்வேறு உருவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் அத்தி மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன அவை அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சுமார் 20000 விநாயகர் சிலைகள் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள விநாயகர் கோயில் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

 



 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்காட்சி நடைபெறாத நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் விநாயகர் சிலைகள் கண்காட்சி நடைபெறுவது விநாயகர் பக்தர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



 

 

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் நகரமான காஞ்சி மாநகரிலுள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள புதிய  ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

 

மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் திருஉருவ சிலைகளை நிறுவி பொதுமக்கள் வழிபாடு, விழாகோலம் பூண்டது காஞ்சி மாநகரம். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இவ்வாண்டு எவ்வித கட்டுபாடுகளுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் திருஉருவ சிலைகளை நிறுவி கொண்டாடிட தமிழக அரசானது அனுமதி வழங்கிய நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.



 

அந்த வகையில் கோயில் நகரம் என்று சொல்லப்படகூடிய காஞ்சிபுரத்தில் அங்காங்கே விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெருவிலுள்ள ஏலேலோ சிங்க சிங்க விநாயகர் கோயிலில் காலை அபிஷேகமானது நடைபெற்று வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளினால் கருவறை முழுவதும் மொத்தம் 15 லட்சம் ரூபாயில் அலங்கரிக்கப்பட்டு ஏலேலோ சிங்க விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதனையெடுத்து புதிய ரூபாய் நோட்டுகளினால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஏலேலோ சிங்க விநாயக பெருமானை பொதுமக்கள் மனமுறுகி வணங்கி வழிபட்டனர்.