செப்டம்பர் 7ஆம் தேதி மற்றும் 8-ம் தேதி உலகம் முழுவதும் கிரகணம் ஏற்பட போகிறது சந்திரன் மீது முழுவதுமாக ஒளிப்படாமல் ரத்த நிறத்தில் காட்சியளிக்க போகிறது...
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் கிரகணம் நிகழப் போகிறது. ராகு உடன் சந்திரன் இணையும், அந்த மகா கூட்டை தான் சந்திர கிரகணம் என்கிறோம். கேதுவுடன் சூரியன் இணைய.... ராகு உடன் சந்திரன் இணைய... மிக நீண்ட சந்திர கிரகணம் அமையவிருக்கிறது...
செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.56 மணி தொடங்கி நள்ளிரவு 1.52 மணிக்கு நிறைவடைகிறது.... வெறும் கண்களால் பூமியில் இருக்கும் 80 சதவீதம் மக்கள் கிரகணத்தை பார்க்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்....
முன்னோர்களின் சாபம் நீங்கும் தினம்:
சூரியன் மற்றும் சந்திரனால் ஏற்படக்கூடிய கிரகண சாபம் மிகவும் கொடியது.... இந்த சாபம் போக வேண்டும் என்றால்? உங்கள் வறுமை நீங்க வேண்டும் என்றால்? முடிந்தவரை மதியத்தில் இருந்து நீர் ஆகாரமாக எடுத்துக் கொள்ளுங்கள் சைவம் மட்டும் உண்ணுங்கள்...
பழங்களாக சாப்பிடுவது நல்லது.... காரணம் நீங்கள் உண்ணும் உணவு ஒருவேளை அசைவமாகவோ, ஜீரணமாகாமல் இருக்கக்கூடிய பரோட்டா, மைதா போன்றவையோ உங்கள் ரத்தத்தில் கிரகண நேரத்தில்... ஜீரணமாகி கலந்தால் அது பெரிய விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தும்... அது உங்களின் டி.என்.ஏ-வில் கலந்து உங்களுடைய எதிர்கால சந்ததிக்கும் சிக்கல்களை கொடுக்கலாம்...
எதையுமே நம் முன்னோர்கள் அறிவுபூர்வமாக... அறிவியல் பூர்வமாகத்தான் சிந்தித்து வைத்திருக்கிறார்கள்... மூடநம்பிக்கைக்கு நம்முடைய தமிழகம் முன்னோர்களுக்கு இடமில்லை அனைத்திலும் ஒரு காரணம் உண்டு ஆகியால்தான் கிரகண நேரங்களில் வருடம் இருக்க வேண்டும் என்றும் கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே வரக்கூடாது என்றும் கூறுவார்கள்....
அசுர பலம் கொண்ட ராகு, கேதுக்கள் சக்தியின் வடிவமாக உச்சத்தில் இருக்கும் என்பதால் நிச்சயமாக நீங்கள் உங்கள் முன்னோர்களை குறித்தோ அல்லது சர்ப்பங்கள் ஆகிய ராகு கேதுகளுக்கு முன்னோர்களின் சாபம் நீங்க ஒரு சின்ன வழிபாட்டை அன்றைய தினம் மேற்கொள்ளுங்கள் பெரிய மாற்றங்களை உங்களுக்கு உருவாக்கும்....
சில காரியங்களுக்கு பரிகாரமே இருக்காது அப்படிப்பட்ட காரியங்களுக்கு கூட பரிகாரமாக கிரகண நேரங்கள் அமைந்து விடும்... நல்ல கர்மாவை சம்பாதித்து வைத்திருப்பவர்களுக்கு கிரகணம் பொதுவாக ஒன்றும் செய்வதில்லை மாறாக ஜாதகத்திலேயே கிரகணங்களால் சபிக்கப்பட்ட மக்களுக்கு கோச்சாரத்தில் கிரகணங்கள் நிகழும் பொழுது அதை பயன்படுத்தி உணவு உண்ணுவதை தவிர்த்து விட்டு பழங்களாக எடுத்து சாந்தமாக பக்தியுடன் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்து என்னுடைய பாவங்களையும் நான் சுமக்கும் என்னுடைய முன்னோர்களின் கர்மாக்களை என்னிடமிருந்து நீக்கி எனக்கு விமோசனம் கொடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள் எண்ணமே வெற்றியை கொண்டு வரும்....
நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கோ அரசு தொடர்புடையவர்களுக்கோ கிரகண நேரத்தில் ஆபத்து வரலாம்... ஒரு நாட்டிற்கோ நாட்டின் அரசுக்கோ கூட சிக்கல்கள் ஏற்படலாம்.... இது போன்ற காலங்களில் மிக சக்தியுடன் இருக்கும் அரசுகள் கூட கவிழும்... நாட்டிற்கு அணுகுண்டுகளாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ பேராபத்துகள் கூட ஏற்படலாம்... இப்படியான சூழ்நிலையில் நாம் நம்மை நம் குடும்பத்தை குரு பக்தியோடு பாதுகாத்துக் கொள்வது நல்லது...
சந்திர கிரகணத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்று யோசிப்பவர்களுக்கு நிச்சயமாக என்பதில் உண்டு என்று தான் கூறுவேன் மற்ற கிரகங்கள் அள்ளிக் கொடுப்பதை விட கோடிக்கணக்கான பணங்களை வாரி கொடுக்கும் ராகு கேதுகளுக்கு ஏற்ற நேரம் தான் கிரகணம் இப்படியாக கோடீஸ்வரராக விரும்புவோர் ராகு கேதுக்களால் பிடிக்கப்பட்டிருக்கும் சூரிய சந்திரனை வணங்கினால் உங்களுக்கு தேவையான பொருளாதார வளங்களை கொடுத்து உங்களை கோடீஸ்வரனாக கூட மாற்றும்....