அசர்பைஜானில் சத்குருவிற்கு ராஜ மரியாதை!
Cop-29 என்ற காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சத்குரு அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அசர்பைஜானின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சகத்தின் தலைமை அதிகாரி மற்றும் பிற அரசு அதிகாரிகள், ஹைதர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.