செப்டம்பர் 4ஆம் தேதி நவமி திதியன்று ஆயுத பூஜையும், செப்டம்பர் 5 ம் தேதி தசமி திதியில் விஜயதசமியும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக உள்ள இந்த விழாக்களை, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை தினத்துக்கு அடுத்த நாள் தொடங்கி 9 நாட்கள் துர்கா தேவியை நினைத்து விரதமிருந்து வழிபட்டு நவராத்திரியை வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர்.






அதே நேரம் தமிழ்நாட்டில் வீடுகளில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டும், நவராத்திரியின் 9ஆம் நாளான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும் அடுத்த நாள் விஜயதசமியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.


 






நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி திதியில் ராமன் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாகப் புராணக்கதைகள் சில கூறுகின்றன.


 






இந்த போருக்காக துர்க்கை தெய்வம் ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் தங்கள் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜை செய்யும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.


 






பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் இந்த விழா நாள்களில் தொடர் விடுமுறை பொதுவாக வரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்தும், உறவினர்களுடன் இணைந்தும், இணையத்தில் வாழ்த்து செய்திகளைப் பகிர்ந்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.