Ayudha Pooja 2024 Date:


புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வட இந்திய மாநிலங்களில் நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும், வெவ்வேறு இடங்களில் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், தேவி வழிபாடும், பெண் தெய்வ போற்றுதலும் கொண்டு அதே நேரத்தில் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், நவராத்திரி பண்டிகை துர்க்கை அம்மனின் 9 விதமான பரிணாமங்களை, அம்சங்களை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது.


மேலும் நவராத்திரியின் இறுதி நாள் கொண்டாட்டமான தசரா, தீமைக்கு எதிரான நல்லதொரு வெற்றியை குறிக்கிறது. அதாவது துர்க்கை அம்மன் தேவி அரக்கனை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்ததை குறிக்கிறது.


தென்னிந்திய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு, நவராத்திரியின் கடைசி நாளான 9 வது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை, சரஸ்வதி பூஜையானது முப்பெரும் தேவியரை போற்றும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மன், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர். சரஸ்வதி தேவி அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் தெய்வ ரூபமாக கருதப்படுகிறார். சரஸ்வதி தேவி, மும்மூர்த்திகளின் ஒரு பகுதியை முப்பெரும் தேவிகளை உருவாக்குகிறார். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், புத்திசாலியாகவும், அறிவாற்றலுடனும் விளங்க தெய்வத்தின் ஆசிகளை நாடுகின்றனர்.


நவராத்திரி பண்டிகையின்போது பொம்மைகளைக் கொண்டு கொலு வைப்பது தமிழ்நாட்டில் பிரசித்தம். திருச்சி மலைக்கோட்டை பெருமாள் கோவில், தஞ்சை பெரிய கோவில், திருப்பதி பெருமாள் கோவில், முருகன் தேர், மாடி வீடு, ஓட்டு வீடு, சிறிய பெரிய கோவில் கோபுரங்கள், நவ நாயகிகள் செட், நவதுர்கைகள் செட், ராதை அலங்காரம் செட், சிவன் பிரம்மா விஷ்ணு செட், ஆண்டாள் செட், போலீஸ் செட், டாக்டர் செட், சப்த ரிஷிகள் செட், சீதா கல்யாணம் செட், சித்தர்கள் செட், ஞானப்பழம் செட், வாலி மோட்சம் செட், நவகிரக பொம்மைகள் செட், விவசாயம் செட், பழனி காவடி செட், அஷ்ட பைரவர் செட், ராவணன் தர்பார் செட், அலங்காரம் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள், அஷ்டலட்சுமி செட், தசாவதாரம் செட், கல்யாண செட், கார்த்திகைப்பெண்கள் செட், முப்பெருந்தேவியர் செட், கிரிக்கெட் செட், வேலை செய்யும் பெண்கள் செட், கும்பகர்ணன் செட், ஆழ்வார் செட், சஞ்சீவி மலை செட், பெருமாள் தாயார் செட், முருகன் வள்ளி தெய்வானை செட், பரதநாட்டியம் செட், பொய்க்கால் குதிரை செட், காய்கறி கடை செட், பழக் கடை செட், கீதா உபதேசம் செட், பேண்ட் வாத்தியம் செட், கோமாதா, லட்சுமி நாராயண செட், லட்சுமி நரசிம்மர், தட்சிணாமூர்த்தி செட், சிவன் குடும்பம் செட், தாத்தா பாட்டி செட், கோவர்த்தனகிரி செட், கஜேந்திர மோட்சம் செட், சமையல் செட், பாண்டுரங்கன் ரகுமாயி ராமேஸ்வரம், திருப்பதி, மாயாபஜார், சாப்பாடு பந்தி செட், வளைகாப்பு செட், நிச்சயதார்த்தம் செட், நவநரசிம்மர் செட், டிரம் செட், பிரம்மோற்சவம் செட், மிருகங்கள் செட், ஐயர் திருக்கல்யாணம், மீனாட்சி திருக்கல்யாணம் செட், ஸ்ரீ விஷ்ணு மற்றும் சித்தர்கள், அத்தி வரதர் செட், கரகாட்டம் செட், நால்வர்கள் செட், ஆசிரியர்கள் பள்ளிக்கூடம் செட், கேரம் போர்டு செட், ஆருத்ரா தரிசனம், அறுபடை முருகன், பழனி காவடி செட், கண்ணப்பர் செட், லலிதாம்பிகை செட், சீனிவாச திருக்கல்யாணம் செட், மைசூர் தசரா செட், சொர்க்கவாசல், வைகுண்டம் செட், சப்தமாதாக்கள் செட். சங்கீத மும்மூர்த்திகள் செட், அருணகிரிநாதர் செட், அபிராமி செட். அஷ்ட ஆஞ்சநேயர் செட், தீமிதி செட். பஞ்ச மூர்த்தி செட், கேரள கொண்டை மேளம் செட், பூம்பாவை செட், அஷ்ட அம்மன் செட், தெய்வானை கல்யாண செட், குழந்தைகள் விளையாடக் கூடிய சென்னபட்டனா பொம்மைகள் போன்ற பலவகையான செட் பொம்மைகளும் மற்றும் தனி பொம்மைகளின் விற்பனையும் களைகட்டி வருகிறது