விஜய்


 நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். தாய்லாந்து, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இலங்கை, இஸ்தான்புல் உள்ளிட்ட நாடுகளில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


நடிகை மீனாக்‌ஷி செளதரி மற்றும் விஜய்க்கு இடையிலான ரொமாண்டிக் பாடல் காட்சி தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது.  ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனாக்‌ஷி செளதரி கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, பிரேம்ஜி, லைலா, மோகன் உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.


யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து வரும்  நிலையில் சித்தார்த்தா நுனி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து பொங்கல் சிறப்பு வெளியீடாக மற்ற போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் விஜய், தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் இளமைப்பருவ கதாபாத்திரங்கள் கலிஃபோனியாவில் டீ.ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வருகின்றன. 


கார் பிரியர் 






நடிகர் விஜய்க்கு சொகுசு கார்களின் மேல் ஒரு அலாதியான பிரியம் எப்போதுமே இருந்து வருகிறது. அவரது கார் கலெக்‌ஷனைப் பற்றிய அப்டேட்கள் வைத்திருப்பவர்களுக்கு இந்தத் தகவல் ஆச்சரியமளிக்காது. ஏற்கனவே  விஜய்யிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மினி கூப்பர், ஆடி ஏ 8 உள்ளிட்ட சொகுசு கார்கள் ஏற்கெனவே உள்ளன.


இந்நிலையில் நடிகர் விஜய் புதிய கார் ஒன்றை தற்போது சொந்தமாக்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்படி விஜய் BMW i7 xDrive 60 என்கிற மின்னியங்கி கார் ஒன்றை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரின் விலை சுமார் 2 கோடிக்கும் அதிகம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.




 விஜய் ஓட்டும் சைக்கிள், அவர் அணியும் செருப்பு, சட்டை, கடிகாரம் என எல்லாவற்றையும் பார்த்து அதை வாங்கத் துடிக்கும் ரசிகர்கள், இந்தக் காரின் விலையைப் பார்த்து கொஞ்சம் திக்குமுக்காடி தான் போய்விட்டார்கள். 




மேலும் படிக்க  : Ayodhya Ram Mandir: “ஆசீர்வாதமாக உணர்கிறோம்” - ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் உற்சாகம்!


Pavni - Amir: "நாங்கள் சேர பிரியங்காதான் காரணம்.." பாவ்னியுடன் திருமணம் எப்போது? - அமீர் சொன்ன பதில்