கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்.


 


 




ஆடி மாதம் என்றாலே ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக அலங்காரங்கள் நடைபெற்ற ஒரு நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலை குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நிகழ்ச்சி முன்னிட்டு


 


 




மூலவர் கணபதிக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனையை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.


 


 




அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலயத்தில் சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார். அதை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


 




 


கரூர் மாவட்டத்தில் மேலும் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயம், உழவர் சந்தை வராகி அம்மன் ஆலயத்தில் உள்ள கன்னி விநாயகர், எல் ஜி பி நகர் பகுதியில் உள்ள குபேர சக்தி விநாயகர் ஆலயம், சக்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் ஆலயத்தில் ஆடி மாத சங்கடகரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக பல்வேறு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் மகா தீபாரதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.