கொரோனா தொற்று காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக கள்ளழகர் மதுரைக்கு வர முடியாமல் போய்விட்டது. இருப்பினும் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆகம விதிப்படி கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றுது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டு கடந்தாண்டு முதல் வழக்கமான சித்திரை திருவிழா நடைபெற்றது.


 







உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டமும், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவது போன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.




சித்திரை திருவிழாவின் நாயகனாக அழகர் மலையில் இருந்து சுந்தர்ராஜப் பெருமாளாக வந்து தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய பெருமாள் கோயிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து அதிகாலை வைகை ஆற்றிலே எழுந்தருளும் நிகழ்வு கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரக்கூடிய நிலையில், இந்த ஆண்டு எதிர் வரக்கூடிய சித்திரை திருவிழாவின் போது நடைபெறக்கூடிய நிகழ்விற்காக அழகர் கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது கோயில் சுவர்களில் வர்ணம் பூசும்பணிகள் நடைபெற்று வருகின்றன.

 



 

குறிப்பாக இந்த கோயிலில் கள்ளழகர் பெருமானை இரவில் இருந்து அதிகாலை வரை விடிய விடிய எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுவது பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாகும். மேலும்  நூற்றாண்டு பழமை வாய்ந்த சுமார் 22 அடி குறுக்கு கட்டைகள் ஆறு அடி அளவு கொண்ட பிரம்மாண்ட சக்கரங்கள் உள்ளடக்கிய வரலாற்று சிறப்புமிக்க ஆயிரம் பொன் சப்பரம் சீரமைத்து புதுப்பிக்கும் பணியை தொடங்கியுள்ளது. அழகர் கோயில் நிர்வாகம். நெருங்கி வரும் சித்திரை திருவிழாவிற்கு கோயில் நிர்வாகம் ஒருபுறம் தயாராகி வரக்கூடிய வேளையில் கள்ளழகரை வரவேற்க ஒட்டுமொத்த மதுரை மக்களும் தயாராகி வருகின்றனர்.