அக்ஷய திரிதியை 2023 இந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று வருகிறது. சுப முகூர்த்தம், நகர வாரியான பூஜை நேரங்கள் மற்றும் தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம் ஆகியவற்றை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


அக்ஷய திரிதியை 2023


நாளைய தினம் அக்ஷய திரிதியை பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, மேலும் மக்கள் விழாவை ஆடம்பரத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். அகா தீஜ் என்றும் அழைக்கப்படும், அக்ஷய திரிதியை ஒரு புனித இந்து மற்றும் ஜெயின் பண்டிகையாகும். இது சுக்ல பக்ஷ திரிதியை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்து நாட்காட்டியில் வைஷாக சந்திர மாதத்தின் பிரகாசமான பாதியில் மூன்றாவது நாள் இந்த சுபமுகூர்த்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த முக்கியமான விழா புதிய தொடக்கங்களுக்கான நாளாக கருதப்படுகிறது. இதற்கிடையில், ஜைன மதத்தில், அக்ஷய திரிதியை முதல் தீர்த்தங்கரரை (ரிஷபநாதர்) நினைவுகூரும், அவரது ஒரு வருட துறவறத்தை முடித்துக் கொண்டு, கரும்பு சாற்றை அவரது கைகளில் ஊற்றினார் என்று நம்பப்படுகிறது.



அக்ஷய திரிதியை என்றால் என்ன?


த்ரிக பஞ்சாங்கத்தின்படி, அக்ஷயா என்றால் 'எப்போதும் குறையாது' என்று அர்த்தம். இந்நாளில் செய்யும் யாகம், ஜபம், தானம், புண்யம் போன்ற நற்செயல்கள் குறையாது என்றும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. திருமணங்கள், புதிய முதலீடுகள் அல்லது புதிய முயற்சிகள், தங்கத்தில் முதலீடு செய்தல் மற்றும் பலவற்றிற்கும் இந்த பண்டிகை மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில், ஆண்டு முழுவதும் பெரும் வெற்றியும் செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: Vegetable Price: மாங்காய் சீசன் ஸ்டார்ட் ஆயிடுச்சு மக்களே.. கிலோ ரூபாய் 15 மட்டுமே.. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ..


அக்ஷய திரிதியை ஏப்ரல் 22ஆ, அல்லது 23ஆ?


இந்த ஆண்டு, அக்ஷய திரிதியை ஏப்ரல் 22 அல்லது 23 இல் வருமா என்பதில் குழப்பம் இருந்தது. த்ரிக பஞ்சாங்கத்தின்படி, ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று இந்த நாள் வருகிறது. அக்ஷய திருதியை திதி ஏப்ரல் 22 அன்று காலை 7:49 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 23 அன்று காலை 7:47 மணிக்கு முடிவடைகிறது.


அக்ஷய திருதியை சுப முகூர்த்தம்:


அட்சய திருதியை பூஜைக்கான சுப முஹூர்த்தம் காலை 7:49 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடைகிறது. கூடுதலாக, சோகடியா முகூர்த்தம் ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 7:49 மணிக்கு தொடங்கி 9:04 மணிக்கு முடிவடையும். மேலும் ஏப்ரல் 23 அன்று காலை 7:26 மணிக்கு தொடங்கி 7:47 மணிக்கு முடிவடைகிறது.



அக்ஷய திரிதியை நகரம்-வாரியான பூஜை நேரம்:



  • சென்னை - காலை 7:49 முதல் மதியம் 12:08 வரை

  • டெல்லி - காலை 7:49 முதல் மதியம் 12:20 வரை

  • புனே - காலை 7:49 முதல் மதியம் 12:33 வரை

  • கொல்கத்தா - காலை 5:10 முதல் இரவு 07:47 வரை

  • ஹைதராபாத் - காலை 7:49 முதல் மதியம் 12:15 வரை

  • அகமதாபாத் - காலை 7:49 முதல் மதியம் 12:38 வரை

  • நொய்டா - காலை 7:49 முதல் மதியம் 12:19 வரை

  • ஜெய்ப்பூர் - காலை 7:49 முதல் மதியம் 12:26 வரை

  • மும்பை - காலை 7:49 முதல் மதியம் 12:37 வரை

  • குர்கான் - காலை 7:49 முதல் மதியம் 12:21 வரை

  • பெங்களூரு - காலை 7:49 முதல் மதியம் 12:18 வரை

  • சண்டிகர் - காலை 7:49 முதல் மதியம் 12:22 வரை


தங்கம் வாங்க உகந்த நேரம்


ஏப்ரல் 22 ஆம் தேதி தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம் காலை 7:49 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 5:48 மணிக்கு முடிவடையும் என்று த்ரிக் பஞ்சாங்கம் கூறுகிறது.