ஆதி காமாட்சி ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் ஆடி பூரத்தை ஒட்டி லட்ச தீபம் நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்


ஆடி மாதம் 


ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான். ஆடி மாதம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் அம்மன் கோவில்களில் திருவிழா நிறைந்து காணப்படும். பக்தர்களும், பொதுமக்களும், பெண்கள் அனைவரும் ஆடி அம்மன் கோயில்களுக்கு படையெடுப்பது வழக்கம். குறிப்பாக ஆடி மாத திருவிழா என்பது, தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஆடி மாதத்தின் பொழுது, பல்வேறு திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.




ஆடிப்பூரம்


குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி உள்ளிட்ட நாட்கள் விசேஷம். அந்த வகையில் ஆடிப்பூரம் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. ஆடிப்பூரும் விழாவை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆடிப்பூரம் முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 



காஞ்சி ஆதி காமாட்சி கோயில்..


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள, ஆதி காமாட்சி கோயில் என அழைக்கப்படும், ஆதி காமாட்சி, ஆதிபீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் கோயிலில் ஆடி மாதம் ஆடி பூரத்தை ஒட்டி லட்ச தீபம் நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லட்ச தீப நிகழ்ச்சியில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.






லட்சதீபம்


 


லட்ச தீபத்தை ஒட்டி ஆதி பீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்து கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பின் கோயில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.  சிறப்பு அலங்காரத்தில் எழுதருளில் ஆதி காமாட்சி அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழு செய்திருந்தனர்.





ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில்


 


ஆதி காமாட்சி அம்மன் என அழைக்கப்படும், ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் இடையே அமைந்துள்ளது.


 


அசுரர்கள் தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என பூலோகம் வந்து, அம்பிகையை வேண்டி தவம் இருந்தனர். அசுரர்களை அழிக்க அம்பிகை காலை வடிவம் கொண்டதால் இந்த கோயிலுக்கு காளி கோட்டம் என்ற பெயரும் உண்டு






பண்டன் என்ற அசுரனை சிறுமி வடிவம் கொண்டு, அம்பிகை அழைத்த பிறகு தேவர்களுக்கு காஞ்சிபுரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். கருணை கொண்ட கடவுள் என்பதால் காமாட்சி என பெயர் பெற்றார். இக்கோயிலில் நுழைவு வாயிலில் ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.




இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபமும் கொடி மரமும் அமைந்துள்ளது ‌. கருவறை அருகே உள்ள ஸ்ரீ சர்க்கரை இயந்திரத்திற்கு நாள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வருகிறது. அம்மன் கோயில் என்பதால் துவார பாலகிகள் பாதுகாப்பிற்கு இருக்கும் சிற்பங்களும் காட்சியளிக்கின்றன .