ஆடி மாதம் என்றாலே ஒவ்வொரு நாளும் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் களைகட்டும். இந்த சூழலில், ஆடி மாத்தில் மிகவும் முக்கியமான திருநாளாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான ஆடிப்பூரம்(Aadi Pooram) வரும் ஆகஸ்ட் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பூரம்:
ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரமே ஆடிப்பூரம் ஆகும். இந்த நன்னாளிலே பூமாதேவி அவதரித்தாகவும், ஆண்டாள் அவதரித்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. உலக மக்களை காப்பதற்காக அம்பாள் சக்தியாக அவதரித்த தினமே ஆடிப்பூரம் என்று புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகவே ஆடிப்பூரத்தை கோலாகலமாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். உமையாள் தோன்றிய ஆடிப்பூரத்தை சைவ தலங்களான சிவாலயங்களில் கொண்டாடுவது போலவே, ஆண்டாள் தோன்றியதற்காக வைணவ தலங்களிலும் கொண்டாடுகின்றனர்.
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு மிக உகந்த மாதம் என்பதால், இந்த ஆடிப்பூர நன்னாளில் அம்மனுக்கு வளைகாப்பு விழாவும் நடத்தப்படுவது வழக்கம். புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயில், மீனாட்சியம்மன் கோயில், நெல்லையப்பர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில் என புகழ்பெற்ற சிவாலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகுவிமர்சிசையாக நடைபெறும். சிவாலயங்கள் மட்டுமின்றி அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெறும்.
அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்கள்:
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் வளையல்களிலே அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த வழிபாட்டில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அவ்வாறு கலந்து கொள்ளும் பெண்களுக்கு அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த வளையல்களை திருமணம் ஆகாத பெண்கள் அணிந்தால் அவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதேபோல, குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இந்த வளையல்களை அணிவதால் அவர்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் ஆடிப்பூர நன்னாளில் வீட்டை சுத்தம் செய்து அம்பாள் படங்களுக்கு மாலை அணிவித்து வழிபடலாம். ஆடி மாதம் வரும் 17ம் தேதி பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Aadi Month 2024: ஆடி மாதம்! வேப்பமரத்திற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? புராணங்கள் சொல்வது இதுதான்!
மேலும் படிக்க: Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்