தமிழ் மாதங்களிலே அனைத்து நாட்களும் மிகவும் பக்திமயமான மாதமாக இருப்பது ஆடி மாதம் ஆகும். இந்த மாதத்தில் வரும் ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி செவ்வாய், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என ஒவ்வொரு நாளுமே சிறப்பு வாய்ந்த நாள் ஆகும்.
தற்போது ஆடி அமாவாசை நடைபெற்று வரும் நிலையில் ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் நன்னாட்கள் முடிந்துள்ளது. ஆடி மாதத்தில் அம்மனை மனதார வணங்கினால் திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
திருமணம் ஆக என்ன செய்ய வேண்டும்?
ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது. இந்த ஆடிப்பெருக்கில் புதுமண தம்பதிகள் தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். அதேபோல, திருமணம் ஆகாத பெண்களும் தங்கள் கழுத்தில் மஞ்சள் சரடு அணிந்து அம்மனை மனதார வேண்டிக் கொண்டால் அடுத்தாண்டிற்குள் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்து வரலட்சுமி பூஜை செய்வது வழக்கம். திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்திற்காக இந்த பூஜை செய்வது வழக்கம். திருமணம் ஆகாத பெண்கள் இந்த பூஜையில் பங்கேற்றாலும் விரைவில் திருமணம் ஆகும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்:
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் அம்மனை மனதார வணங்கி பூஜை செய்தால் திருமணம் ஆகும் என்பது ஐதீகமாக உள்ளது.
ஆடி வெள்ளியைப் போன்றே ஆடி செவ்வாய்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இந்த நாளில் ஒளவையார் விரதம் இருந்தால் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமை நாளில் அம்மனை வணங்கி மங்கள கெளரி விரதம் இருந்தால் நீண்ட நாட்களாக திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
ஆடி வெள்ளிக்கிழமையில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாகதோஷ பூஜை செய்தால் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பெருகும். அதேபோல, திருமணமும் நடக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஆடிப்பெருக்கு:
மேலே கூறியபடி அம்மனை வணங்கினால் நீண்ட நாட்களாக திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம் ஆகும். ஆடிப்பெருக்கு எனப்படும் ஆடி 18ம் நாள் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. இந்த நாள் தமிழ்நாடு முழுவதும் மிகவும் விழாக்கோலம் பூண்டு காணப்படும். குறிப்பாக, காவிரி கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பூஜை செய்வது வழக்கம்.