ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் தும்பவனத்து அம்மன் திருக்கோவிலில் வளையல் அலங்காரத்தில் தும்பவனத்தம்மனை பக்தர்கள் வழிபட்டனர்
காஞ்சிபுரம் தும்பவனத்து அம்மன் திருக்கோவில்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : ஆடி மாதம் ( Aadi Month 2023 ) வந்தாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். கோவில் நகரமான காஞ்சிபுரம் தும்பவனத்து கிராமத்தில், பிரசித்தி பெற்ற தும்பவனத்து அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டை ஒட்டி தும்பவனத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மலர் மாலைகள் அணிவித்து, சந்தன காப்பு அலங்காரத்தில் மூன்றாம் வெள்ளிக்கிழமை ஒட்டி வளையல் மாலை அணிவித்து தும்பவனத்து அம்மன் பக்தர்களால் வழிபடப்பட்டார்
ஆடி வெள்ளிக்கிழமை
ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து தும்பவனத்து அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்தனர். பொதுமக்களும் கோவிலுக்கு வருகை புரிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, தும்பவனத்து அம்மனுக்கு மாவு விளக்கு ஏற்றி வைத்து பொங்கல் படையல் இட்டு சிறப்பு பூஜை செய்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
சிறப்பு வழிபாடுகள்..
ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை ஒட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வருகின்றனர். மாலை வேளையில் வழக்கத்தை விட பல கோவில்களில், மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்