கரூரில் டி. செல்லாண்டிபாளையம் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உலகில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டி. செல்லாண்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மூலவர் பகவதி அம்மனுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்ப அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் பகவதி அம்மன் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பின் சந்தன காப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதை தொடர்ந்து, சுவாமிக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தில் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார். சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் சுங்க கேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆதி மாரியம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆதி மாரியம்மன் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்து, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கும் விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆதி மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.