Twitter X features : இனி நம்பரே தேவையில்லை.. புதிய அம்சங்களை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது.
வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பொதுவாக ட்விட்டரில் மெசேஜ், ஸ்பெஸ் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. இந்நிலையில், பயனர்களை கவரும் விதமாக புதிய அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
ட்விட்டர் தளத்தில் இடம்பெற்று இருக்கும் புதிய கால் ஐகானை கிளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எலான் மஸ்க் பதிவிட்டிருப்பதாது, ட்விட்டரில் ஆடியா மற்றும் வீடியோ கால் வசதி அறிமுகமானது. இதற்கு போன் நம்பர் கூட தேவை இல்லை. அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் ஒரு செயலியாக ட்விட்டரை மாற்றம் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. அதன் செயல்பாடுகள் தனித்துவமானதாக இருக்கும்” என்று தனது பதிவில் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.இன்ஸ்டா, ஃபேஸ்புக் ஆகிய செயலிகளுக்கு போட்டியாக ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில், மைக்ரோபோனில் மியூட்ஆன் , மியூட், லவுட் ஸ்பீக்கர், டர்ன் ஆஃப் வீடியோ மற்றும் என்ட் தி கால் என நான்கு ஆப்ஷன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.