X Update : அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு புது அப்டேட் காத்திருக்கு.. என்னென்னு தெரிஞ்சிக்க இதை படிங்க!
முக்கியஸ்தர்களும், சினிமா பிரபலங்களும் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
காலம்காலமாக இதில் பல மாற்றங்களும் அப்டேட்களும் கொண்டு வரப்பட்டது.
அக்டோபர் 2022ல், உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்கினார்.
பின்னர் அவர் பங்கிற்கு என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியுமோ அதை கொண்டு வந்தார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் ட்விட்டர் பெயரையும் அதன் லோகோவையும் எக்ஸாக மாற்றினார்.
தற்போது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் அவர்களின் கணக்கிலிருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை ரீமிக்ஸ், எடிட் செய்துகொள்ளலாம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த அப்டேட் கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. முன்னதாக வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய தனிப்பட்ட பதிவிறக்க செயலிகளை பயன்படுத்தி வந்திருப்போம். இனி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு அது அநாவசியமாகிவிட்டது.