iPhone 16 Features : அம்சங்களை அள்ளிவிட்ட ஐபோன் நிறுவனம்.. போன்னுனா இப்படிதான் இருக்கணும்!
ஐபோன் 16 டிஸ்ப்ளே 6.1 இன்ச் ஆக இருக்க, ஐபோன் 16 பிளஸ் டிஸ்ப்ளே 6.7 இன்ச் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் அல்ட்ராமரைன், டீல், இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் இந்த ஐபோன் 16 கிடைக்கும்
புதிய ஐபோன் 16 சீரிஸ் A18 பயோனிக் சிப்செட்டை கொண்டுள்ளது. 12MP 2x டெலிஃபோட்டோ லென்ஸ், 48MP ஃப்யூஷன் கேமராவை கொண்ட ஐபோன் 16 HDR ஆதரவுடன் 60fps இல் 4K வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்டது.
சூப்பர் அம்சங்கள் : வாய்ஸ் மெசேஜை மெசேஜாக மாற்றுவது, நீளமான மெசேஜ்களை உங்களுக்கு புரியும் படி சிறிதாக சுருக்கி கொள்வது போன்ற ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மற்றொரு செயலியை பயன்படுத்தானல் ஐபோனிலே செய்ய முடியும். கேமரா லென்ஸை நமக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்ய புதிதாக டாகுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த ஒளி உள்ள இடத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கலாம். ஐபோனில் எடுக்கும் வீடியோக்களில் வாய்ஸ் ஓவரை மிக்ஸ் செய்து கொள்ளலாம்.
உங்கள் புகைப்படங்களுக்கு எதுமாதிரியான கலர் டோன் மற்றும் ஸ்டைல் வேண்டும் என்று அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் தரமான புகைப்படங்கள் கிடைக்கும். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், புகைப்படம் எடுக்கும் முன்னரே லைவ் ப்ரிவ்யூவில் அந்த கலர் டோனையும் ஸ்டைலையும் பார்க்க முடியும். அத்துடன் ஐபோன் 16 மாடலின் பேட்டரி மற்ற மாடல்களை விட நீண்ட நேரம் நிலைக்கும் வகையில் உருவாகப்பட்டுள்ளது.
ஐபோன் 16 மாடலின் விலை 79,900 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஐபோன் 16 பிளஸ் மாடலின் விலை 89,900 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலை 1,19,900 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 1,44,900 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
ஐபோன் 16 மாடலை வாங்க விரும்புவோர் செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 5:30 மணி முதல் முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 20 ஆம் தேதியில் இருந்து கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.