I Phone 15 : இந்த செப்டம்பரில் வெளியாகும் புது மாடல் ஐபோன்!
அதிகம் விற்பனையாகும் போன்களில் முதன்மையானது ஐ-போன்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடல் போன்களை அறிமுகப்படுத்தும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன்படி அடுத்த மாதம் 12ம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐ-போன் 15 சீரீஸ், ஆப்பிள் வாட்ச் 9 மற்றும் அதன் ப்ரோ மாடல் ஆகியவற்றை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஐபோன்களின் சார்ஜிங் போர்ட், டைப்-சி யாக மாற்றப்பட உள்ளது. முன்னதாக, ஐரோப்பாவில் புதிய சட்ட விதி படி அங்கு வெளியாகும் அனைத்து சாதனங்களின் சார்ஜர்கள், டைப்-சி யில் இருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது.
அதைதொடர்ந்து, தற்போது ஐபோnகளில் இருக்கும் ஐஓஎஸ் (IOS) 16 ஐ விட அதிக திறன் கொண்ட ஐஓஎஸ் (IOS) 17ஐ அறிமுகமாகலாம். மிகவும் சக்தி வாய்ந்த சிப்பான ஏ17 அறிமுகமாகலாம்
இப்புதிய மாடல்களில் மியூட் பட்டன் இருக்காது. இதற்கு பதிலாக கஸ்டமைசேஷன் பட்டன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வசதியை அந்த பட்டனில் ப்ரோகிராம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
புது மாடல் ஐபோனின் ஆரம்ப விலை 79,900 ரூபாயில் இருந்து அதிக பட்ச மாடலின் விலை 1,49,900 ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -