Apple ios 17 : ios 17ல் உள்ள புதிய வசதிகள் என்ன? எந்தெந்த ஐபோன்களுக்கு இது சப்போர்ட் செய்யும்?
உலகளவில் -ஆப்பிள் நிறுவனம் நடத்திய WWDC 2023 நிகழ்ச்சியில் ios 17ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய அப்டேட் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும். இதைத்தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appios 17 இதுவரை விற்பனையான ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் முதல் ஆப்பிள் ஐபோன் 11 வரையிலான மாடல்களுக்கு சப்போர்ட் செய்யும். மேலும் ஐபோன் XS,XR,SE (2வது ஜெனரேஷன்) ஆகிய ஐபோன்களுக்கும் சப்போர்ட் செய்யும்.
ஆப்பிள் வாட்ச் கருவியில் இடம்பெறும் அதே வசதி இனி ஐபோன்களிலும் இடம்பெறும். மேலும் கூடுதலாக Live Activities, Game Scores, Widgets, Clock Styles போன்ற பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாம் யாருக்காவது தொடர்புகொள்ள முயற்சி செய்தால் Live Transcript மூலமாக Voicemail அனுப்பலாம்.
ஒருவருக்கு Facetime Video மூலமாக இனி வீடியோ மெசேஜ் அனுப்பலாம். இந்த வசதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
Airdrop பயன்படுத்துவது மேலும் சுலபமாக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களை நாம் அருகில் வைப்பதன் மூலம் இனி ஒரு போனில் இருந்து இன்னொரு போனிற்கு விவரங்களை பரிமாற்றமுடியும். இதில் இமெயில், போன் நம்பரை ஷேர் செய்யலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -