ICC Cricket World Cup Qualifier : உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி!
இந்த வருடத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். நேற்று நேப்பாள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற நேப்பாள கேப்டன் ரோகித் பாடெல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களான பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த ஜான்சன் சார்லஸ் டக்-அவுட் ஆனார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரன் நிதானமாக ஆடினர். அற்புதமான ஆட்டத்தால் இருவரும் சதம் விளாசினார்கள்.
50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது வெஸ்ட் இண்டீஸ். 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கியது நேப்பாள் அணி.
49.4 ஓவரில் நேபாள அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 238 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இதன் மூலம் 2 வெற்றியை பெற்றது.