Sara Ali Khan : ‘திரைப்பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கு வந்துள்ளேன்..’ உருக்கமாக பதிவிட்ட சாரா அலி கான்!
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் - நடிகை அம்ரிதா சிங் ஆகிய இருவருக்கும் பிறந்த மூத்த மகள் சாரா அலி கான். சாராவிற்கு இப்ராஹிம் என்ற தம்பியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகருத்து வேறுபாடால் சைஃப் அலி கானும், அம்ரிதா சிங்கும் பிரிந்தனர். பின் சைஃப், கரீனா கபூரை மணந்து தைமூர், ஜஹாங்கீர் ஆகிய இரு குழந்தைகளின் தந்தையானார்.
அம்ரிதா சிங்கை விட்டு சைஃப் பிரிந்தாலும், சாரா, இப்ராஹிம் ஆகிய இருவரும் அவர்களின் தந்தையுடனும், கரீனா கபூருடனும், அவர்களின் குழந்தைகளுடனும் சுமுகமான உறவில் இருந்து வருகின்றனர்.
சாரா, 2018 ஆம் ஆண்டில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்து கேதார்நாத் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அப்படத்தில் இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அனைவரையும் ஈர்த்தது. தன்னுடன் நடித்த சுஷாந்த் உயிரழந்த போது, தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருந்த சாரா பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியான நபராக மாறினார்.
2021ல் வெளியான அட்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்) படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார்.
தற்போது, தனது திரைப்பயணத்தை தொடங்கிய கேதார்நாத் கோயிலுக்கு சாரா சென்றுள்ளார்.
“ நான் இந்த இடத்திற்கு முதன்முறையாக வந்தபோது, நான் கேமரா முன்பு நடித்ததே இல்லை. இப்போது கேமரா இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததற்கும் எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் உங்களிடம் நன்றி சொல்கிறேன் கேதார்நாத். உங்களிடம் வரும் அதிர்ஷ்டம் வெகு சிலருக்கே உள்ளது. நான் உங்களுக்கு நன்றி சொல்லத் திரும்ப வந்துள்ளதால் நான் முழுமையாக உணர்கிறேன் ஜெய் போலேநாத்.”என உருக்கமாக பதிவிட்டுள்ளார் சாரா.
இவரின் ஆன்மிகம் நிறைந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -