Twitter X : எக்ஸை பயன்படுத்த கட்டணம் செலுத்தனமா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?
ட்விட்டர் தளத்தை, பொதுவாக அதிகாரப்பூர்வமான தகவல்களை பதிவிடவும் பகிரவும் பார்க்கவும் பயன்படுத்துவோம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appட்விட்டரை தன் வசப்படுத்திய எலான் மஸ்க், அந்த தளத்தை வாங்கிய முதல் நாளில் இருந்தே பல மாற்றங்களை செய்து வருகிறார்.
அழகிய குருவி லோகோவை எக்ஸாக மாற்றியத்துடன் ட்விட்டரின் பெயரையும் மாற்றினார்.
இந்தநிலையில், இதுவரை இலவசமாக பயன்படுத்தியக்கூடிய எக்ஸ்.காம் விரைவில் கட்டணச் சேவையாக மாறும் என்று எலன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், அனைத்து எக்ஸ் வாடிக்கையாளர்களும் தங்களது சேவைகளை பெற விரும்பினால், ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர சந்தாவாக செலுத்த வேண்டி இருக்கும்.
மாதாந்திர கட்டணம் எக்ஸில் கொண்டு வந்தால், பெரும்பாலான பயனர்கள், எக்ஸில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்படும். இதை தொடர்ந்து, எக்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் விளம்பர வருவாய் குறைந்து, பெரிய இழப்பை சந்திக்கும் சூழலை உருவாக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -