Iphone 15 Features : ஐபோன் 15 வாங்க போறீங்களா? அதற்கு முன்னாடி இதை தெரிஞ்சிக்கோங்க!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் செல்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்ச்சி, இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கியது. அதில், 15 சீரிஸில் 4 புதிய செல்போன்களையும், அதோடு 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
அதன்படி, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 என புதியதாக இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களும் வெளியாகியுள்ளன.
இவை, இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும். இதில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் என்பது USB வடிவிலான சி டைப் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
14ப்ரோ மாடலில் இருந்த பஞ்ச்- ஹோல் டிஸ்பிளே மாடல் தற்போது ஐபோன் 15 சீரிஸின் ஸ்டேண்டர்ட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. மியூட் சுவிட்ச் பட்டனுக்கு பதிலாக ஆக்ஷன் சுவிட்ச் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. கேமரா உள்ளிட்ட அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஐபோன் 15 ப்ரோ மாடலை பொறுத்தவரை பெரிதாக மாற்றமில்லை. அதற்கு, நல்ல பினிஷிங் டச் கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லலாம்.
சிறந்த கேமரா அனுபவத்திற்காக புதிய நைட் மோட், ஸ்மார்ட் HDR மோட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 4K வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். மேம்படுத்தப்பட்ட bokeh effects மற்றும் வேகமான ஷட்டர் ஸ்பீடில் புதிய போர்ட்ரெய்ட் மோட்டையும் கொண்டுள்ளது.
இதில் வழங்கப்பட்டுள்ள voice isolation ஆப்ஷனை பயன்படுத்தி, தெளிவாக உரையாட முடியும். ஐபோன் 15 மற்றும் பிளஸ் மாடலுக்கு உள்ள ஒரே வேறுபாடு டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி மட்டுமே ஆகும்.
ப்ரோ மாடல்கள் இரண்டிலும் A17 ப்ரோ சிப் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் கிடைக்காத செயல்திறனையும், உயர்தர கணினிகளுக்கு இணையாக செயல்படும் திறனையும் ஐபோன்களுக்கு வழங்கும் என கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட, உயர் ரக கேமிங் அனுபவங்களை பெறும் வகையிலும் ப்ரோ மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.