Tushar Deshpande : ‘காதல் கிரிக்கெட்டு விழுந்திருச்சு விக்கெட்டு..’ காதலியுடன் கரம் பிடித்த துஷார் தேஷ்பாண்டே!
2022 ஆம் ஆண்டில் சென்னை அணியால் 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் துஷார் தேஷ்பாண்டே. கடந்த ஆண்டு இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை. கடைசி மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதில் இம்பாக்ட் ப்ளேயர் என்ற முக்கிய விதிமுறையினால் பல புதுமுகங்கள் விளையாடினர். அதேபோல்தான் துஷார் தேஷ்பாண்டேயும் சென்னை அணிக்காக விளையாடினார்
துஷார் தேஷ்பாண்டேவிற்கும் அவரது தோழியான நபா கடாம்வார் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.
அவரது நிச்சயத்திற்கு சென்னை அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் ஷிவம் துபே நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். மணமக்களுடன் எடுத்த புகைப்படத்தை துபே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துஷார் தேஷ்பாண்டேவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
தற்போது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டர் துஷார் தேஷ்பாண்டே. இந்த புகைப்படம் சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.