Shikhar dhawan | மனைவி ஆயிஷா முகர்ஜியுடன் ஷிகார் தவான்.. புகைப்படங்கள்!
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான். இவர், கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
ஆயிஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள், ஷிகார், ஆயிஷாவுக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில்,ஷிகார் தவானும், ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
”விவாகரத்து என்ற வார்த்தை அழுக்கானது. நான் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்ய உள்ளேன்” என்று ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விவாகரத்து தொடர்பாக ஷிகார் தவான் உறுதிப்படுத்தவோ, அதுகுறித்து பேசவோ இல்லை.
தவான் ஏதாவது கூறினால்தான், விவாகரத்து குறித்து முழுவிவரம் தெரியவரும்.