Indonesia open Badminton: இந்தோனேசிய ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய இணை..புதிய மைல்கல்லை எட்டியது சாத்விக் - சிராக் ஜோடி!
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜாகார்த்தவில் நடந்து வந்த நிலையில் நேற்று இத்தொடரின் இறுதி ஆட்டம் நடைப்பெற்றது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களான சாத்விக் - சிராக் இணை, மலேசியாவின் ஆரோன் சியா - சோ வூய் யிக் இணையுடன் மோதியது.
43 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 21-17, 21-18 என்ற நேர்செட்களில் வெற்றியை கைப்பற்றியது சாத்விக் - சிராக் இணை.
சாம்பியன் பட்டம் வென்ற சாத்விக் - சிராக் ஜோடிக்கு வெற்றிக் கோப்பையுடன், தங்கப் பதக்கம், மொத்தமாக ரூ.75.77 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த தொடருடன் 11 முறை ஆரோன் சியா - சோ வூய் யிக் இணையுடன் மோதியுள்ள நிலையில், சாத்விக் - சிராக் ஜோடி வெற்றிப் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக, இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீரரான எச்.எஸ்.பிரணாய் அரையிறுதியில் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியாகி இருந்தது குறிப்படத்தக்கது.