Raavanan 13 years : 'உசுரே போகுதே...உசுரே போகுதே... ' - இன்று உடன் 13 ஆண்டுகள் நிறைவு செய்த மணிரத்னத்தின் ’ராவணன் !
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரியாமணி, ப்ரித்விராஜ், பிரபு ஆகியோர் நடித்து ராவணன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
இந்திய புராணக் கதையான ராமாயணத்தில் வரும் ராவணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ராவணன்.
‘வீரய்யா’ என்கிற கதாநாயகன் காவல்துறை தனது தங்கையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றதற்கு பழிதீர்க்க, காவலர் தேவ் பிரகாஷ் (ப்ரித்விராஜ்) மனைவியான ராகினியை (ஐஷ்வர்யா ராய்) கடத்தி அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான்.
தொடக்கத்தில் வீரய்யாவை வெறுக்கும் ராகினி அவனது கதைகளை தெரிந்துகொண்ட பின் அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துகொள்கிறார்.
தன்னை கடத்திச் சென்ற ராவணனை தனது கணவன் ராமனைவிட சிறந்த ஒரு மனிதனாக சீதை உணர்ந்தால், அவன் மீது அவளுக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையை படமாக்கியிருக்கிறார் மணிரத்னம்.
மொத்தத்தில் மணிரத்னம் தனக்கேற்ப எடுக்கும் பானியில் படத்தை படமாக்கியிருக்கிறார்.