Aus Vs Eng: மூன்றாம் நாளில் 386 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா..
இங்கிலாந்தில் நடக்கும் ஆஷஸ் டெஸ்ட் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. பின்னர் இரண்டாம் நாள் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவீட் வார்னர் 9 ரன்களில் ஆட்டம் இழக்க பின்னர் களம் இறங்கிய மார்னஸ் லபுஷேன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக கவாஜா நிதானமாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தார்.பின்னர் களம் இறங்கிய ஸ்மித் 16 ரன்களுக்கு ஆட்டம் இழக்க கவாஜா டிராவிஸ் ஹெட்டிடம் கைகோர்த்து சிறப்பாக ஆடி இருவரும் அரைசதத்தை அடித்தனர்.
டிராவிஸ் ஹெட் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க. அலெக்ஸ் கேரி உடன் இணைந்த கவாஜா அதிரடியாக ஆட 321 பந்துகளில் 141 ரன்கள் அடித்து சத்தினார்.
மூன்றாவது நாளான நேற்று அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்து ஆட்டம்மிழக்க . கவாஜாவும் 141 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கியவர்கள் சொர்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா. அதிகபட்சமாக கவாஜா மூன்று சிக்சர் 14 பவுண்ரிகளுடன் 141 ரன்கள் அடித்தார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6.5 ஓவரில் 26 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறிக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.