CSK vs KKR : சி.எஸ்.கேவின் சுழலில் சிக்கி தவித்த கே.கே.ஆர்..சென்னை அணிக்கு அதிரடி வெற்றி!
சுபா துரை | 09 Apr 2024 12:25 AM (IST)
1
ஐ.பி.எல் 2024 இன் 19 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
2
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
3
தொடக்கம் முதலே சி.எஸ்.கே வீரர்களின் சுழலில் சிக்கி தவித்த கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறவே, 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
4
அடுத்ததாக களமிறங்கிய சி.எஸ்.கே வீரர்கள் நிதானமாக விளையாடி, 17.4 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.
5
இறுதியாக கேப்டன் ருத்துராஜ், 58 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
6
இந்த போட்டியின் முடிவுக்கும் பிறகு, சி.எஸ்.கே அணி நான்காவது இடத்திலும், கொல்கத்தா அணி, இரண்டாவது இடத்திலும் நீடிக்கிறது.