15 years of IPL : ‘ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..’ இதே நாளில் 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஐபிஎல்!
ABP NADU | 18 Apr 2023 08:13 PM (IST)
1
இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதில் ஐ.பி.எல்லிற்கு முக்கிய பங்கு உண்டு.
2
இந்தியாவில் சினிமாவுக்கு நிகரான ரசிகர்கள் கிரிக்கெட்டிற்கும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
3
அந்த வகையில் ஐ.பி.எல்லிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.
4
பணக்காரன் முதல் பாமரன் வரை கிரிக்கெட்டை கொண்டு செலுத்தியது ஐ.பி.எல் என்றே சொல்லலாம்.
5
இன்று இந்திய அணியில் நட்சத்திர வீரர்களை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது ஐ.பி.எல்.
6
அன்று எட்டு அணிகளோடு தொடங்கிய ஐ.பி.எல், பல அணிகள் தோன்றியும் மறைந்தும் 16 ஆவது சீசனில் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்து இருக்கிறது.