CSK Qualifier 2023 : 10வது முறையாக இறுதிசுற்றில் களமறிங்க போகும் சென்னை அணி..சிங்கங்களுடன் மோத போவது யார்?

நேற்று நடந்த போட்டியில், முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணியும், 2ஆம் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்வதாக அறிவித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சென்னை அணி களம் கண்டது. தொடக்க வீரர்களாக களம் கண்ட ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே ஆகியோர் முதல் 10 ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடந்தனர். இதில் ருதுராஜ் அட்டகாசமாக ஆடினார். அவர், 36 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் அரைசதம் எட்டிய நிலையில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வெற்றியின் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. லக்னோ - மும்பை இடையேயான எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மே 26 நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் மோதவுள்ளது. இந்த மூன்று அணிகளில், வெற்றி பெறும் அணியே ஃபைனலுக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சஹா 12 ரன்களிலும், சுப்மன் கில் 42 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 8 ரன்களிலும், தசுன் ஷனகா 17 ரன்களிலும், டேவிட் மில்லர் 4 ரன்கள், ராகுல் திவேடியா 3 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாயினர்.
மற்ற குஜராத் வீரர்களும் சொதப்ப, இறுதியாக 20 ஓவர்களில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -