RR vs RCB: பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை ; வெல்லப்போவது யாரு?
2021 ஐபிஎல் தொடரின் 43-வது போட்டியில், கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் துபாய் மைதானத்தில் இன்று மோத உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த சீசனில் இதற்கு முன் இரு அணிகளும் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து சேஸிங் களமிறங்கிய பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அதிரடி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய படிக்கல் (101*), கோலி (72*) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐபிஎல் வரலாற்றில், இதுவரை 24 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளனர். இதில், பெங்களூரு அணி 11 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2020 சீசனின்போது துபாய் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் பின் தங்கி இருப்பதால், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -