IPL 2021: ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ள கொல்கத்தா, தோல்வியால் டெல்லிக்கு ‘நோ’ பாதிப்பு
ஐபிஎல் தொடரில் 41வது போட்டியில், ஷார்ஜா மைதானத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதின.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரபாடா, அஷ்வின் வீசிய 10,11வது என இரண்டு ஓவர்களில் போட்டி டெல்லியின் பக்கம் திரும்பியது. எளிதான சேஸிங்கை கடினமாக்கிய கொல்கத்தா அணிக்கு, ராணா, நரேன் களத்தில் நின்று ரன் சேர்த்தனர். 17,18வது ஓவரின்போது நரேன்,டிம் சவுதி ஆகியோர் வெற்றி பெற வேண்டிய சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
முதல் இன்னிங்ஸை பொருத்தவரை, கொல்கத்தா அணி பெளலர்கள் சிறப்பான பெளலிங் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினர்.
சேஸிங்கின்போது கில், வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் களமிறங்கினார். போட்டியின் ஐந்தாவது ஓவரில், லலித் யாதவ் வீசிய ஓவரில் வெங்கடேஷ் ஐயர் பவுல்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திரிபாதியும் அடுத்த ஓவரிலேயே வெளியேறி, கொல்கத்தாவின் சேஸிங்கில் ப்ரேக் போட்டனர்.
எளிதான சேஸிங்கில், தடுமாறி பிறகு கம் -பேக் கொடுத்த கொல்கத்தா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று 2 புள்ளிகள் பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -