GT vs LSG pics: லக்னோவை பந்தாடிய குஜராத்! முதல் அணியாக ப்ளே ஆஃபுக்கு தகுதி
ABP NADU | 10 May 2022 11:26 PM (IST)
1
2022 ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
2
முதலில் பேட் செய்த குஜராத் அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.
3
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சேஸ் செய்த லக்னோ அணி, சீட்டுக்கட்டு சரிவதுப்போல விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தது.
4
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி, முழுமையாக 20 ஓவர்களை விளையாடவில்லை. 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
5
இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது ஹரிதிக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி.