ஐபில் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா? இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

இந்திய அணியின் டி 20 கேப்டனும் முன்னாள் குஜராத் அணியின் கேப்டனுமாகிய ஹர்திக் பாண்டிய கடந்த உலகக்கோப்பை தொடரில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2023 ஐபில் இறுதிப்போட்டியில் குஜாரத் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டிய குஜராத் அணியை இறுதி போட்டிக்கு அழைத்து வந்தார்.

இதற்கு முன் 2022 ஆம் ஆண்டில் ஐபில் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் அணி ஐபில் பட்டத்தை தட்டி சென்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்ட ஹர்திக் பாண்டிய தற்போது குஜராத் அணியில் இருந்து விலகி மும்பை அணிக்கு திரும்பியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பியதும் அவரை மும்பை அணியின் கேப்டனாக மும்பை அணி நிர்வாகம் நியமித்துள்ளது. ரோஹித் ஷர்மா மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்த நிலையில் ஹர்திக் பாண்டியவை மும்பை அணியின் கேப்டனாக நியமித்ததில் பெரும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தங்களின் எதிர்ப்பை இணையத்தில் தெரிவித்து வந்தனர். தற்போது ஹர்திக் பாண்டியா ஐபில் போட்டியில் விளையாடுவதே கேள்விக்குறியாகியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது என தகவல் பரவிவருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -